\
மின் விளக்கு இல்லை - கால்வாய்க்குள் விழுந்து தாய், மகள் உயிரிழப்பு!

மின் விளக்கு இல்லை - கால்வாய்க்குள் விழுந்து தாய், மகள் உயிரிழப்பு!

மின் விளக்கு இல்லை - கால்வாய்க்குள் விழுந்து தாய், மகள் உயிரிழப்பு!
Published on

சென்னை முகப்பேரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகள் கால்வாயில் தவறி விழுந்து பலியாகினர்.

சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரிசில்லா. 50 வயதாகும் பிரிசில்லா தனது 20 வயதுடைய மகள் ஈவாலின் உடன் மதுரவாயிலில் இருந்து அயனம்பாக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் சென்னை மதுரவாயில் பைபாஸ் சாலையில் செல்லும்போது நிலை தடுமாறி அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில் விழுந்துள்ளது.

3 அடி அகலமும் 12 அடி ஆழமுடைய கால்வாயில் இருவரும் தவறி விழுந்துள்ளனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்குள் இருவருமே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒளி பிரதிபலிப்பான்,மின் விளக்கு இல்லாததும், சாலையுடன் சமமான தளம் உடைய கால்வாய் அமைக்கப்பட்டு தடுப்பு வேலி இல்லாமல் இருப்பதும் விபத்து நடந்ததற்கு காரணமாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com