\
கிணற்றில் தத்தளித்த மகன்.. யோசிக்காமல் குதித்த தாய்.. சோகத்தில் முடிந்த பாசப்போராட்டம்

கிணற்றில் தத்தளித்த மகன்.. யோசிக்காமல் குதித்த தாய்.. சோகத்தில் முடிந்த பாசப்போராட்டம்

கிணற்றில் தத்தளித்த மகன்.. யோசிக்காமல் குதித்த தாய்.. சோகத்தில் முடிந்த பாசப்போராட்டம்
Published on

மதுரையில் கிணற்றில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். பள்ளிமாணவரான இவர் இன்று மதியம் கிணற்றில் குளிக்கசென்றுள்ளார். திடீரென நீரில் மூழ்கிய அவர் சத்தமிட்டுள்ளார். மகன் மூழ்குவதைப் பார்த்து அவரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் சற்றும் யோசிக்காமல் கிணற்றில் குதித்துள்ளார் அந்த சிறுவனின் தாயார் செல்வி. மகனைக் காப்பற்ற முயற்சியில் இறங்கிய அவரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தடுமாறிய தாயும், மகனும் நீருக்கும் மூழ்கி பலியாகினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புதுறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். நீச்சல் தெரியாத நிலையில் கிணற்றில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com