ஒரே நேரத்தில் அரசு வேலைக்கு தேர்வான அம்மா- மகள்..!

ஒரே நேரத்தில் அரசு வேலைக்கு தேர்வான அம்மா- மகள்..!

ஒரே நேரத்தில் அரசு வேலைக்கு தேர்வான அம்மா- மகள்..!
Published on

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று தாய்- மகள் ஒரே நேரத்தில் அரசு வேலைக்கு செல்கின்றனர்.

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சாந்தி (48). தம்பதியினருக்கு மொத்தமாக 3 மகள்கள் உள்ளனர். அதேசமயம் ராமச்சந்திரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனிடையே அரசாங்க வேலைக்கு சாந்தியும், அவரது மூத்த மகளான தேன்மொழியும் (27) ஒன்றாக சேர்ந்து முயற்சித்துள்ளனர். இதற்காக இலவச பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்ட அவர்கள் குரூப் 4 தேர்வெழுதி முடிவிற்காக காத்திருந்தனர். இந்நிலையில் இருவரும் தேர்ச்சி பெற்று ஒரே நேரத்தில் அரசு வேலைக்கு செல்ல உள்ளனர்.

இதுகுறித்து சாந்தி கூறும்போது, கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்தே டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வந்தேன். தற்போது என் மகளுடன் சேர்ந்தே எனக்கும் வேலை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். ஒரே நேரத்தில் அம்மாவுக்கும் மகளுக்கும் அரசு வேலை கிடைத்தது, குடும்பத்தினரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்கம்பக்கத்தினரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com