செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழப்பு ? - உறவி‌னர் புகார்

செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழப்பு ? - உறவி‌னர் புகார்

செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழப்பு ? - உறவி‌னர் புகார்
Published on

ராமநாதபுரத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழந்ததாக கூறி அரசு மருத்துவமனையை உறவி‌னர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மனைவி கீர்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, நேற்றிரவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாகவும் சில நிமிடங்களிலேயே தாய் கீர்த்திகாவும் உயிரிழந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் கீர்த்திகா மற்றும் சேயின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செவிலியர் பிரசவம் பார்த்ததாலேயே உயிரிழப்பு நேரிட்டதாக கூறி, அதிகாலையில் கீர்த்திகாவின் உறவினர்கள் மருத்துமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை தலைமைக் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, உயிரிழப்புச் சம்பவம் குறித்து இரவு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், தவறு நேர்ந்திருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com