\
பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பு - வேலூரில் சோகம்

பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பு - வேலூரில் சோகம்

பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பு - வேலூரில் சோகம்
Published on

சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் பிறந்த குழந்தையும் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் போலிப்பாக்கத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா தனது மனைவி மகாலட்சுமியை பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். இரவு மருத்துவமனை ஊழியர்கள் மகாலட்சுமிக்கு பிரசவம் முடிந்ததாகவும், பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து மீண்டும் சிறிது நேரம் கழித்து தாய் மகாலட்சுமியும் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் இன்று தனியார் மருத்துவமனைமீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் முற்றுகையில் ஈடுபட்டிருந்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து முற்றுகை கைவிடப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com