\
சென்னை: பல்பொருள் அங்காடியில் முந்திரி, பாதாம் திருடிய தாய், மகள் கைது

சென்னை: பல்பொருள் அங்காடியில் முந்திரி, பாதாம் திருடிய தாய், மகள் கைது

சென்னை: பல்பொருள் அங்காடியில் முந்திரி, பாதாம் திருடிய தாய், மகள் கைது
Published on

சென்னை மடிப்பாக்கத்தில், பல்பொருள் அங்காடிக்கு வந்த தாய், மகள் ஆடைக்குள் பொருட்களை திருடி செல்ல முயன்ற போது கையும் களவுமாக பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவது போல் வந்த இரண்டு பெண்கள் ஆடைக்குள் முந்திரி, பாதாம் போன்றவற்றை மறைத்து வைத்துக் கொண்டிருந்தனர். இதனை கண்ட கடையின் ஊழியர், இரண்டு பெண்களையும் பிடித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த நாகஜோதி மற்றும் பேச்சியம்மாள் என்பதும், தொடர்ந்து கடையில் இருந்து முந்திரி, பாதாம் உள்ளிட்ட பொருட்களை திருடி வந்ததும் தெரியவந்தது. இதுவரை 11 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அவர்கள் திருடியது விசாரணையில் அம்பலமானதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com