\
அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த மாநிலம் ‘தமிழ்நாடு’

அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த மாநிலம் ‘தமிழ்நாடு’

அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த மாநிலம் ‘தமிழ்நாடு’
Published on

2016 ஆம் ஆண்டு அதிகளவில் சுற்றுலாப் ‌பயணிகள் வருகை தந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

மாநிலங்களவையில் அமைச்சர் மகேஷ் சர்மா அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திலும், கேரளா 2 ஆம் இடத்திலும் உள்ளது.

2016 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு சுமார் 47.22 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த மொத்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையில் 19.1 சதவிதம் வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com