Headlines| ஈரானின் வருவாய் ஆதாரம் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல் to CBI விசாரணைக்கு ஆஜராகும் விஜய்!
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை... எரிசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை...
ஹோர்முஸ் நீரிணையை விரைவில் கைப்பற்றுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சூளுரை... நீரிணை மூடப்பட்டதால் பாதிப்புக்குள்ளான நாடுகள், ஈரானுக்கு எதிராக போர்க் கப்பல்களை அனுப்பும் என்றும் கருத்து...
யுஎஸ்எஸ் ட்ரிபோலி விமானம் தாங்கி போர்க்கப்பலை வளைகுடா கடல்பகுதியில் நிலைநிறுத்திய அமெரிக்கா... ஈரான் மீதான தாக்குதலுக்கு மத்தியில் அமெரிக்க கடற்படையினரும் ஆயத்தம்...
ஈரானின் வருவாய் ஆதாரமாக திகழும் கார்க் தீவில் அமெரிக்கா கடுமையான தாக்குதல்... தற்போது ராணுவ நிலைகளை அழித்துள்ளதாகவும் அடுத்து எண்ணெய் ஆலை அழிக்கப்படும் என்றும் ட்ரம்ப் பேச்சு...
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா பகுதியில் உள்ள எண்ணெய் முனையத்தில் பெரும் தீ விபத்து... ஈரானின் கார்க் தீவு எண்ணெய் நிலையத்தை அமெரிக்கா தாக்கிய சில மணி நேரங்களில் சம்பவம்...
துருக்கி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான்... துருக்கி நாட்டின் இறையாண்மையை மதிப்பதாக ஈரான் பாதுகாப்புத் துறை விளக்கம்...
மேற்காசிய போரில் பெரும்பாலான இந்தியர்கள் தங்களை ஆதரிப்பதாக ஈரான் உயர் தலைவரின் இந்திய பிரதிநிதி அப்துல் மஜீத் இலாஹி கருத்து... எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட இந்திய சகோதர, சகோதரிகளுக்கு உதவ முயற்சிப்பதாகவும் பேட்டி...
ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அங்கு சிக்கியிருந்த இந்திய மருத்துவ மாணவர்கள் மீட்பு... 101 பேர் கொண்ட முதல் குழு இன்று இந்தியா வரவுள்ளதாக தகவல்...
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா நோக்கி வருவதாக மத்திய அரசு தகவல்... இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் விளக்கம்...
தட்டுப்பாடு அச்சத்தின் காரணமாக நாட்டில் LPG சிலிண்டர் முன்பதிவுகள் திடீரென அதிகரிப்பு... தேவையுள்ளபோது மட்டுமே சிலிண்டர் முன்பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்...
நாட்டில் LPG சிலிண்டர் விநியோகம் நிலையாக நடைபெற்று வருவதாக மத்திய அரசு விளக்கம்... வணிக சிலிண்டர் விநியோகம் 29 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல்...
வீட்டு பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர்களை வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது... பதற்றம் வேண்டாம் என்றும் புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்...
LPG விநியோக கட்டுப்பாடுகள் காரணமாக மருந்து தயாரிப்பு துறையில் பாதிப்பு ஏற்படும் அபாயம்... பாராசிட்டமால் மாத்திரைகள், சிரிஞ்சுகள் போன்ற அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறைக்கு உள்ளாகும் வாய்ப்பு...
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை திட்டவட்டம்... ஒன்பது நாட்களுக்கு தேவையான இருப்பு உள்ளதாகவும் விளக்கம்...
மின் அடுப்பு பயன்படுத்துவதால் உணவகங்களுக்கு யூனிட்டுக்கு 2 ரூபாய் சலுகை... சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சினை சரியாகும் வரை சலுகை தொடரும் எனதமிழக அரசு அறிவிப்பு...
எல்பிஜி பயன்படுத்தும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25 சதவீத மானியத்துடன் கடன்... தொழிற்சாலைகளில் மாற்று எரிபொருளாக மண்ணெண்ணெய், ஆர்டிஎஃப், பயோமாஸை பயன்படுத்திக் கொள்ளவும் தமிழக அரசு அனுமதி...
தமிழகத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் 20 சதவீதம் மட்டுமே விநியோகம்... மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசு விளக்கம்...
பொது விநியோக திட்டத்துக்கு இந்த மாதம் கூடுதலாக 3 ஆயிரத்து 228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்... குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு ஆணை....
மக்கள் நலனை காக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி...
மேற்காசிய போரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அசாமில் பிரதமர் மோடி பேச்சு... மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் பொறுப்பற்று செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு...
மத்திய பாஜக அரசு தங்கள் சுய நலனுக்காக நாட்டின் விவசாயத்துறையை பலி கொடுப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு... குறைந்தபட்ச ஆதார விலை, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்த கேள்விகளுக்கு உரிய பதில் வழங்காததை சுட்டிக்காட்டி பதிவு...
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை... தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக தேர்தல் அறிக்கையும் வெளியாக வாய்ப்பு...
திமுக கூட்டணியில் மதிமுகவை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிகளையும் குறைக்க நினைக்கிறதா திமுக? 6 தொகுதிகளை தக்கவைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரம்...
காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் தர முடியும் என்றால் தங்களுக்கும் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்...அதிக தொகுதிகள் கொடுக்க முடியாதுஎன்று திமுக சொல்வதில் நியாயம்இல்லை என்றும் சண்முகம் கருத்து...
தொகுதிகளை குறைத்தால் ஏற்பதா என்பது குறித்து தேர்தல் குழு முடிவெடுக்கும்... திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் மு. வீரபாண்டியன் பேட்டி...
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு... கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவது தொடர்பாக ஆலோசனை என தகவல்...
திமுக கூட்டணியில் சலசலப்பு இருப்பதால் கூட்டணி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அண்ணாமலை பேட்டி... திருமாவளவன் 5 அல்லது 6 தொகுதிகளுக்கெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் கருத்து...
தவெகவுடன் அதிமுக எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை... அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
கரூர் துயரம் தொடர்பான இன்றைய சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றார் தவெக தலைவர் விஜய்... கூட்டணிக்கு பாஜக அழைக்கும் நிலையில் டெல்லி சென்றடைந்தார்...
விஜய் டெல்லி பயணத்திற்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து... தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கும் பதில்...
காரைக்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் முதல்முறையாக தொகுதி மக்களை சந்தித்த சீமான்... பதவிக்காகவும், பணத்துக்காகவும் யாரிடமும் சமரசம் செய்துகொள்ளவில்லை என பேச்சு...
இலக்கியத் துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு... தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் விருதை காணிக்கை ஆக்குவதாக வைரமுத்து நெகிழ்ச்சி...
ஞானபீடம் விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை தமிழ்நாடே வாழ்த்துகிறது... கலைஞர் இருந்திருந்தால் உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார் என முதல்வர் ஸ்டாலின் பதிவு..
தமிழ்நாட்டில் கரீப் பருவ நெல் கொள்முதல் இலக்கை 23.50 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம் செய்ய வேண்டும்... பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் கோரிக்கை...
சென்னையில் 551 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்... 15 முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்...
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலராக தர்மர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நியமனம்... ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்பு..
கரூர் மாவட்டம் வெள்ளியணையில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து... 22 மாணவர்கள் காயம்...
தூத்துக்குடியில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம்... குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து 4ஆவது நாளாக போராட்டம்...
கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர் கலந்ததாக பக்தர்கள் குற்றச்சாட்டு... தண்ணீர் கொண்டுவரப்படும் நீர்வழிப் பாதையில் இருந்த கழிவுகள் குளத்துக்கு வந்ததாக அதிகாரிகள் விளக்கம்...
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்... வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
உத்தரகாண்ட் மாநிலத்தின் தாராலி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு... பாதிக்கப்பட்ட 115 குடும்பங்களுக்கு மறுவாழ்வு ஏற்பாடுகள் தொடங்கிய மாநில அரசு...
நெல்லை மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையத்தில் நடந்த கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை... கடல்மட்ட வளிமண்டல அழுத்தத்தில் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவிப்பு...
எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனத்தில் இணைந்த ஐஐடி மும்பையில் படித்த இந்திய ஆராய்ச்சியாளர்... செயற்கை நுண்ணறிவு துறையில் ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ உருவாக்கும் பணிக்கு தேர்வு...
பங்குனி மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு... ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்...
சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அடுத்த மாதம் முதல் விசாரணை... மத அறிஞர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தல்...
கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கல்வீச்சு... பலருக்கு காயம்... பிரதமர் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு நடந்த மோதலால் பரபரப்பு...
6 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் போராளி சோனம் வாங்சுக் விடுதலை... லடாக் வன்முறையை தொடர்ந்து தேசியப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருந்த நிலையில் விடுவிப்பு...
கேரளாவைச் சேர்ந்த பிரபல நெப்ராலஜி நிபுணர் டாக்டர் கே.வி. ஜோனி காலமானார்... இந்தியாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முன்னின்று வழிநடத்தியவர்...
விமானக்கட்டணங்களை 199 ரூபாய் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை உயர்த்துவதாக ஆகாசா நிறுவனம் அறிவிப்பு மேற்காசிய போரால் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி...
காஸாவில் பாலஸ்தீன மக்கள் கூடாரம் அமைத்து தங்கியிருந்த பகுதிகளை புரட்டிப்போட்ட புழுதிப்புயல்... போர் பதற்றத்துக்கு மத்தியில் இயற்கை பேரிடர்களாலும் பாதிப்புக்குள்ளாகும் மக்கள்...
ஈகுவடாரில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்... தவறான பொருளாதார கொள்கைகளால் நாடு சீரழிந்துவிட்டதாக முழக்கம்...

