HEADLINES | புதுச்சேரியில் வேட்பாளர்களை அறிவித்த சீமான் to மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!
ஈரானில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்... உயிர் பயத்துடன் ஒவ்வொரு நாளையும் கழிப்பதாக வேதனை..
வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் நாசர் விளக்கம்... உதவி மையங்கள், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி...
60 வயது வரையுள்ள பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக இரண்டாயிரத்து 500 ரூபாய்... தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்...
சொந்த வீட்டில் வாழ அனுமதி கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா மீண்டும் மனு… நீதிமன்ற படியேறினால் வீட்டில் இடமில்லை என்று விஜய் தரப்பு மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு...
விஜய்யின் உயர்ந்த நிலை கருதியே கண்ணியமான முறையில் சுமுக விவாகரத்து பெற முயன்றேன்... முயற்சிகள் கைகூடாத நிலையிலேயே நீதிமன்றம் வந்திருப்பதாக சங்கீதா உருக்கம்...
மதுரை, திருச்சி, ஓசூரை தொடர்ந்து திண்டுக்கலில் அமைகிறது மினி டைடல் பார்க்... அனுமந்தராயன்கோட்டையில் அமைக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிவிப்பு...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைமை மீண்டும் ஆலோசனை... ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என வீரபாண்டியன் தகவல்...
ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் திமுகவில் இணைந்த 50 ஆயிரம் ஆதரவாளர்கள்... மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்...
பிஹாரில் நிதிஷ் குமாருக்கு நேர்ந்த கதியே நாளை பழனிசாமிக்கும் நடக்கும்... அதிமுகவின் ரத்தத்தை பாஜக உறிஞ்சப்போவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...
இது டெல்லிக்கு நடக்கும் தேர்தல் அல்ல... யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதற்கான தேர்தல் என எடப்பாடி பழனிசாமி பேச்சு...
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் பெயர் அறிவிப்பு... ஒரே மேடையில் 28 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார் சீமான்...
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கடும் குழப்பம்... யார் பெரிய கட்சி என்பதில், இருகட்சி நிர்வாகிகள் இடையே ஈகோ யுத்தம்...
பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி திமுக அலுவலகத்துக்கு காங்கிரஸ் குழு வரட்டும் என மாநில அமைப்பாளர் சிவா திட்டவட்டம்... தமிழ்நாட்டைப் போன்ற ஆட்சியை புதுச்சேரி மக்கள் எதிர்பார்ப்பதாகவும் பேட்டி..
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேருக்கும் வாழ்நாள் சிறை...
மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் இன்று கட்டணமின்றி கண்டுகளிக்கலாம்... மகளிர் தினத்தையொட்டி தொல்லியல் துறை அறிவிப்பு...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஃஹீட்டை தாண்டிய வெப்பநிலை... அதிகபட்சமாக வேலூரில் 103 டிகிரி பாரன்ஃஹீட் வெப்பம் பதிவு...
மேற்குவங்கத்தில் தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடிகள் இருந்ததாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேச்சு... மம்தா பானர்ஜி தன்னை நேரில் வரவேற்காவிட்டாலும், அவர் தனக்கு சகோதரிதான் எனவும் கருத்து...
மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிகழ்ச்சியில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு... மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு எல்லைகளை மீறிவிட்டதாக பிரதமர் மோடி விமர்சனம்...
எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதால், ஜனாதிபதியை வரவேற்க செல்ல முடியவில்லை... குளறுபடிகள் எதுவும் நடக்கவில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம்...
ஈரான் இலக்குகளை குறிவைத்து தாக்கிய புதிய வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா... அமெரிக்காவின் தாக்குதலில் தீப்பிடித்து எரிந்த டெஹ்ரான் விமான நிலையம்...
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்... பெய்ரூட் நகர் அருகே நடந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டதாக தகவல்...
இஸ்ரேல் மீது ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் படைகள் தாக்குதல்... வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்களை குறிவைத்தும் தாக்கியதாக ஈரான் அறிவிப்பு...
துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய ஈரான்... ஜோர்டானில் அமைக்கப்பட்டிருந்த 300 மில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க வான் பரப்பு ரேடார் கருவியும் தாக்கி அழிப்பு...
ஈரானை மீண்டும் கடுமையாக தாக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு... ஈரானின் மோசமான நடத்தையால் விரைவில் முழு அழிவை சந்திக்கும் எனவும் எச்சரிக்கை...
போரில் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, மன்னிப்பு கோரிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்... நிபந்தனையின்றி சரணடைய ட்ரம்ப் வலியுறுத்தியிருந்த நிலையில் அது ஒருபோதும் நடக்காது என்றும் திட்டவட்டம்...
துபாய் விமான நிலையத்தில் ஒருவாரமாக நிறுத்தப்பட்டிருந்த விமானச் சேவை படிப்படியாக தொடக்கம்... அண்டை நாடுகளை தாக்க மாட்டோம் என ஈரான் அறிவித்திருந்த நிலையில், மீண்டும் திரும்புகிறது இயல்பு நிலை...
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்... உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்...
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என மத்திய அரசு திட்டவட்டம்... வளைகுடாவில் சூழல் சீரான பிறகு வழக்கம் போல் எண்ணெய் வர்த்தகம் தொடங்கும் எனவும் தகவல்...
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதியளித்த விவகாரம் குறித்து விவாதம் தேவை... நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்...
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா எந்த நாட்டின் அனுமதியையும் சார்ந்து இல்லை என மத்திய அரசு விளக்கம்... காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் பதில்...
எதிர்கால சூழல்களை கருத்தில் கொண்டு கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் எரிவாயு வாங்க மத்திய அரசு நடவடிக்கை... உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க, அவசரகால உத்தரவு பிறப்பிப்பு...
மேற்காசிய போர் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 55 ரூபாய் உயர்த்தியது பாகிஸ்தான்... பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாயில் லிட்டருக்கு முன்னெப்போதும் இல்லாதவகையில் 321 ரூபாயாக அதிகரிப்பு...
தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோக கட்டுப்பாடு முறையை அமல்படுத்தியது மியான்மர் அரசு... வளைகுடா நாடுகளில் நிலவும் அசாதாரண சூழலால் ஏற்பட்டுள்ள எண்ணெய் தட்டுப்பாட்டால் நடவடிக்கை...
பெட்ரோல் தட்டுப்பாடு என்ற தகவலால் வங்கதேச பெட்ரோல் பங்க்குகளில் அலைமோதும் கூட்டம்... திடீரென தேவை அதிகரிப்பால் வினியோக அளவுக்கு கட்டுப்பாடு விதிப்பு...
தமிழகத்தைப் போன்று கேரளத்திலும் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை... அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார் ராகுல்காந்தி...
பிஹார் அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை... முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இன்று இணைகிறார்
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தினர்... ஆயுதங்களை ஒப்படைத்து, அமைதியான வாழ்க்கை வாழப்போவதாகவும் உறுதி...
டி20 உலக கோப்பையை 3ஆவது முறையாக வெல்லுமா இந்தியா? அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை...
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண அகமதாபாத் நகரில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்... சொகுசு விடுதி, ஓட்டல்களில் அறைகளின் கட்டணம் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்வு...
மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்... வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய போட்டிகள்...
துரந்தர் இரண்டாம் பாகத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு... ரன்வீர் சிங்கின் அதிரடி சண்டைக் காட்சிகள்.. ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு...

