HEADLINES | தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை TO முதல்வர் ஸ்டாலின் மீதான சீமான் குற்றச்சாட்டு!
சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள மாநில முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும்... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்...
இலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என கணிப்பு...
சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு... ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக அறிவிப்பு...
சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை தாண்டி வெல்வோம்... கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை...
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அதிமுகவினரிடம் 2ஆவது நாளாக நேர்காணல் நடத்திய எடப்பாடி கே.பழனிசாமி... வெற்றி மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும்; வாய்ப்பு கிடைக்காவிடில் வருந்தக்கூடாது என அறிவுறுத்தியதாக தகவல்...
அமைச்சரவையில் இடம் வேண்டும் என அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை... தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்...
ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்றவற்றை பொதுவெளியில் பேசக்கூடாது... உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை...
முதல்வர் மு.க.ஸ்டாலின் சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் என சீமான் குற்றச்சாட்டு... போராடும் ஆசிரியர்களைப் பற்றி முதல்வருக்கு கவலை இல்லை எனவும் பேட்டி...
அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் தமிழக அரசை ஆளுநர் தேவையின்றி விமர்சிக்கிறார்... நீதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதற்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்...
கரூர் துயரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை... விஜய் பிரச்சார வாகனத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு...
முன்னோர்களின் போராட்டங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதுதான் பராசக்தி படத்தின் நோக்கம்... படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி...
திமுகவின் வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் பராசக்தி திரைப்படம்... படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை...
ஜனநாயகன் தணிக்கைச் சான்று விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு... நாளை அவசர வழக்காக விசாரிக்க பட தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை...
பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 15ஆம் தேதி தெறி படம் மறு வெளியீடு... விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் தெறி படம் ரீ-ரிலீஸ்...
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்... காமேனி அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் 3ஆவது வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் எச்சரிக்கை...
ஈரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை எதிர்நோக்குகிறது... அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் பரபரப்பு கருத்து...

