Headlines | யுடிஎஸ் மொபைல் செயலியின் சேவை நிறுத்தம் முதல் திமுக இளைஞர் அணி சந்திப்பு வரை!
அதிமுக கூட்டணி என்பது மக்கள் நலனுக்கானதல்ல என திமுக இளைஞரணி தென்மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு... அதிமுகவில் மியூசிக்கல் சேர் விளையாட்டு நடப்பதாகவும் விமர்சனம்...
நானும் ரவுடிதான் என்பதுபோல் கூட்டணிக்கு தாமே தலைமை என்கிறார் பழனிசாமி... எடப்பாடி பழனிசாமி, என்டிஏ பழனிசாமியாகிவிட்டார் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்...
இந்தியை திணிக்கும் ஆபத்து இன்றும் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு... மும்மொழிக் கொள்கை எனும் கத்தி நம் தலைக்கு மேல் தொங்குவதாகவும் பேச்சு...
பிரதமர் மோடியின் காலைப் பார்த்து பழனிசாமி நடப்பதாக உதயநிதி கடும் தாக்கு... பத்து தோல்வி பழனிசாமி, மொத்த தோல்வி மோடி என்றும் விமர்சனம்...
குழந்தைகள் பலூன் போல புதிது புதிதாக கட்சிகள் உருவாவதாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு... தேர்தல் திருவிழா முடிந்ததும் அந்தக் கடைகள் காலியாகிவிடும் என்றும் விமர்சனம்...
பாஜகவுடன் அதிமுக துரோகக் கூட்டணி வைத்துள்ளதாக திமுக எம்.பி கனிமொழி விமர்சனம்... தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கிள்ளிக்கூட கொடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு...
ஊராட்சி செயலர்களை தேர்தல் பரப்புரைக்கு திமுக பயன்படுத்துகிறது... அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு...
மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தால் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நடுக்கம்... முதல்வர் பதவிக்கு ஏற்றவாறு பேசவில்லை என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்...
டெல்லியில் வரும் 10ஆம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை... தேர்தல் நெருங்கும் நிலையில் முக்கியத்துவம் பெறும் கலந்துரையாடல்...
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் உரிமை அனைவருக்கும் உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி... பங்கு கொடுக்கும் மனது, முதல்வருக்கு இருக்கிறது என்றும் கருத்து...
பாஜக மதத்தை வைத்தும், பாமக சாதியை வைத்தும் வெறுப்பரசியலில் ஈடுபடுவதாக திருமாவளவன் விமர்சனம்... விசிகவின் நிலைப்பாட்டை பாதிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் முடிவெடுக்க மாட்டார் என்றும் நம்பிக்கை...
புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது... எம்ஜிஆரை விஜய்யுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல என்றும் விசிக தலைவர் திருமாவளவன், புதிய தலைமுறைக்கு பேட்டி...
அதிமுகவுக்கு பாதகம் வராதபடி பன்னீர்செல்வம், சசிகலா நடந்துகொள்வார்கள்... இருவரும் தனிப் பாதையில் செல்ல மாட்டார்கள் என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் சூசகம்...
கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா தகவல்.. ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக தரப்பில் தற்போது வாக்குறுதி தரப்பட்டுள்ளதாகவும் பதில்..
கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறுகிறது இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடு... வேப்பூரில் தயார் நிலையில் மாநாட்டுத் திடல்...
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் 17ஆம் தேதி தாக்கல்... நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு...
தமிழகம், புதுச்சேரியில் வரும் 13ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தகவல்... அடுத்துவரும் நாட்களில் படிப்படியாக வெப்பநிலை உயரக்கூடும் எனவும் கணிப்பு...
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்... மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் வானிலை மையம் எச்சரிக்கை...
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்வு... ஒரு கிராம் தங்கம்14ஆயிரத்து 420 ரூபாய்க்கு விற்பனை...
வெள்ளி விலை கிலோவுக்கு 5ஆயிரம் ரூபாய் அதிகரிப்பு ... சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 285 ரூபாய்க்கு விற்பனை...
பிரசித்தி பெற்ற பருவதமலை ஏறி சாமி தரிசனம் செய்ய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... வெளி மாவட்ட பக்தர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது...
இந்திய - மலேசிய உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்... மலேசியாவைப் போலவே தமது அரசிலும் அதிக தமிழர்கள் இருப்பதாக மகிழ்ச்சி...
மலேசியாவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒலித்த திருமுறைகள்... மாணவிகளின் பாடலை மெய்மறந்து ரசித்து கேட்ட பிரதமர்...
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்... குறிப்பிட்ட சில அமெரிக்க பொருட்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படுவதாகவும் பேட்டி...
வர்த்தக ஒப்பந்தம் குறித்த இந்தியா, அமெரிக்கா கூட்டறிக்கையில் முக்கிய அம்சங்கள் குறித்து தெளிவில்லை என காங்கிரஸ் விமர்சனம்.. அமெரிக்க விவசாயிகள் நலனுக்காக இந்திய விவசாயிகள் நலன் காவு கொடுக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து...
அஜித் பவார் மரணத்தில் எல்லோருக்கும் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர் ரோஹித் பவார் பேட்டி... எந்த சூழலில் இறப்பு நிகழ்ந்தது என்பது குறித்து 10ஆம் தேதி விரிவாக விளக்குவதாக தகவல்....
புறநகர் மற்றும் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை பெற ரயில் ஒன் செயலியை பயன்படுத்த அறிவுறுத்தல்... நடைமுறையில் உள்ள யுடிஎஸ் மொபைல் செயலி மார்ச் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என ரயில்வே வாரியம் தகவல்...
பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்த விவகாரம்... தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு..
ரஷ்யா, உக்ரைன் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு ஜூன் வரையில் காலக்கெடு விதித்த அமெரிக்கா... அபுதாபியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது என ட்ரம்ப் கருத்து...
காசாவில் அமைதியை ஏற்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம்... வாஷிங்டன் நகரில் வரும் 19ஆம் தேதி நடத்த அமெரிக்கா திட்டம்...
ரஷ்யாவில் நிலவும் கடும் குளிரால் உறைந்த புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் கால்வாய்... நடைப்பயிற்சி செல்வது, சைக்கிளிங் செய்வது என உறைந்த கால்வாயில் செல்லும் மக்கள்...
சிங்கப்பூர் கண்காட்சியில் இடம்பெற்ற சீனாவின் புதிய வகை மின்சார விமானம்... உலக விமான சந்தையில் ஆதிக்கம் செலுத்த ஆர்வம் காட்டும் சீனா...
இத்தாலியின் மிலன் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலம்... போட்டிபோட்டு பதக்கங்களை குவித்துவரும் விளையாட்டு வீரர்கள்...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா... வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி அசத்தல்...
அபுதாபியில் ரேஸர் அஜித்தை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்... கார் பந்தயத்தில் பங்கேற்கும் நிலையில், சந்தித்து உரையாடல்...

