ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் - விஜய் pt

Headlines | கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின் to ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்டுப்பாடு!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின் முதல் ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்டுப்பாடு வரை விவரிக்கிறது.
Published on

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வரும் 4ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும். அதேவளையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 நாட்களில் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்த நிலையில், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை..

2 நாட்கள் இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி. இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார் பெஞ்சமின் நெதன்யாஹூ.

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - இஸ்ரேல் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து... செயற்கை நுண்ணறிவு துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உடன்பாடு கையெழுத்தானது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைப்பு. 4 மணி நேர இறுதி ஊர்வலத்திற்குப் பின் நல்லகண்ணுவின் உடல் தானம். 72 குண்டுகள் முழங்க முழு மரியாதை வழங்கியது தமிழக அரசு.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் 2ஆவது நாளாக இன்று ஆலோசனை... மத்திய அரசின் விசாரணை முகமை அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார் ஞானேஷ் குமார்...

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்கத்துறை தலைமை இயக்குனர் ராகுல் நவீன் சென்னை வருகை... தமிழகத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை தொடர்பாக ஆய்வு நடத்த திட்டம்.

சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே இன்று பேச்சுவார்த்தை... இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கவிருப்பதாக மாநிலச் செயலாளர் சண்முகம் தகவல்.

ஒருநாள் பயணமாக கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

தத்தமது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வராத திமுக, காங்கிரஸ்… கூட்டணி பேச்சுவார்த்தை முடக்கம்…

தவெகவுடன் பின்புறப் பேச்சு.. கூடவே அதைப் பொதுத்தளத்திலும் பகிரும் காங்கிரஸ் தலைவர்கள்... கடும் அதிருப்தியில் திமுக… எதை நோக்கிச் செல்லும் திமுக - காங்கிரஸ் கூட்டணி?

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகம் வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி… ராகுலின் தமிழகம் பயணத் திட்டம் ஓரிரு நாட்களில் உறுதியாக வாய்ப்பு...

மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி
மு.க.ஸ்டாலின், ராகுல் காந்திPt web

தமிழகத்தில் காங்கிரஸைப் பலப்படுத்தும் திட்டத்தில் ராகுல்… தேர்தலை ஒட்டி தமிழக காங்கிரஸ் நிர்வாகத்தில் மாற்றங்களுக்கும் வாய்ப்பு எனத் தகவல்…

முதல்வர் ஸ்டாலினின் மாநில சுயாட்சி பேச்சு, தேர்தல் நாடகம் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்... மோடி எதிர்ப்பிலும் இரட்டை வேடம் போடுவதாக சாடல்...

பிரதமர் மோடியின் மதுரை பயணத்திற்கு பிறகே பழனிசாமியோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை... பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்...

ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்டுப்பாடு விதிப்பு... கட்சித் தலைமை அனுமதியின்றி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என தவெக பொதுச்செயலர் ஆனந்த் அறிவுறுத்தல்...

இன்னும் 2 நாட்களில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி... திராவிட கட்சிகளுடன்தான் கூட்டணி இருக்கும் என்றும் உறுதி...

சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான மின்சார ரயில் போக்குவரத்து சேவை... மார்ச் 10ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு...

ரயில் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க, கூடுதலாக 20 சிறப்பு மின்சார ரயில்களை இயக்க முடிவு.... தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு...

சென்னை, சேலத்தைத் தொடர்ந்து கடலூரில் காகங்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு... கங்கணாங்குப்பம் ஊராட்சியில் காகங்கள் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்...

உயிரிழக்கும் காகங்கள்
உயிரிழக்கும் காகங்கள்Pt web

நீதித் துறையை விமர்சிக்கும் 8ஆம் வகுப்பு பாட புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததன் எதிரொலி... அனைத்துவிதமாக பதிப்புகளில் இருந்தும் பாடப்புத்தகங்களை உடனடியாகத் திரும்பப் பெற என்.சி.இ. ஆர்.டி. இயக்குநருக்கு கடிதம்.

கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை... பட நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கைது... துணைவேந்தரின் சர்ச்சையாக கருத்துகளை கண்டித்து பேரணி சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்...

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்... பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல்...

எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பான நீதி விசாரணைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆஜர்... எப்ஸ்டீனை தாம் சந்திக்கவில்லை எனவும் பேட்டி...

ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி... இந்திய பந்துவீச்சாளர்களின் சாகசத்தால் 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஜிம்பாப்வே...

உலகக் கோப்பை டி20 தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா... சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி...

ஸ்டாலின் - விஜய்
கள யதார்த்ததிற்கு மாறாக காங்கிரஸ்? கடும் கோபத்தில் திமுக! அரசியல் பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com