\
morning headlines for february 21th 2026
சீமான், மழைஎக்ஸ் தளம்

Headlines | நாம் தமிழர் கட்சியின் மாநாடு முதல் கனமழை எச்சரிக்கை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நாம் தமிழர் கட்சியின் மாநாடு முதல் கனமழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நாம் தமிழர் கட்சியின் மாநாடு முதல் கனமழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.

  • சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சியில் இன்று நடைபெறுகிறது நாம் தமிழர் கட்சியின் மாநாடு... 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுக செய்துவைக்கிறார் சீமான்...

  • மதுரையில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... திமுக கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு...

  • ட்ரம்பின் வரிவிதிப்பு செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு... அதிகாரத்தை மீறி ட்ரம்ப் செயல்பட்டுள்ளதாக நீதிமன்றம் காட்டம்...

  • உச்ச நீதிமன்ற தீர்ப்பால் வரிவிதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்... மாற்று சட்டங்களைப் பயன்படுத்தி 10 சதவீத உலகளாவிய வரியை விதிக்கப்போவதாகவும் அறிவிப்பு

  • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை... விருதுநகர், தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...

morning headlines for february 21th 2026
டொனால்டு ட்ரம்ப்எக்ஸ் தளம்
  • டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று தொடங்குகிறது சூப்பர் 8 சுற்று... பலமான அணிகள் ஒரே பிரிவில் மோதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை...

  • ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகும் நிலையில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல்...

  • சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் உலோகவியல் பரிசோதனை அறிக்கையை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிக்கும்படி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சையின்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் 42 சதவீதத்துக்கும் அதிகமானவை தவறாகப் பயன்படுத்தப்படுவதாக புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

  • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com