Headlines | மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் To இம்ரான் கானுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெறக்கூடும் எனவும் தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மார்ச் 1 மற்றும் 6ஆம் தேதிகளில் மதுரை, வேலூர் வருகிறார் பிரதமர் மோடி. இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுக்களை அமைத்தது தமிழக பாஜக.
தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது, தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 48 ஆயிரத்து 696 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் கடன் சுமை 10.71 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெறும் என சபநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்டை திமுக அரசின் காது குத்தும் விழா என விமர்சித்து, விமர்சன அழைப்பிதழுடன் சட்டமன்ற வளாகத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று யார் யாரோ சினிமாவில் நடித்துவிட்டு எம்ஜிஆர் போல் ஆக கனவு காண்கிறார்கள்; அது ஒருபோதும் நடக்காது என சென்னையில் இதயக்கனி படம் பார்த்த பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, விஜய் மீது மறைமுக தாக்கு.
ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் நிலைப்பாடு அல்ல; தனிநபர்களின் நிலைப்பாடுதான். வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் காங்கிரஸ், திமுக உறுதியாக இருப்பதாகவும் கே.சி.வேணுகோபால் பேட்டி.
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 14ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை. அதேசமயம், 265 ரூபாயாகவே தொடர்கிறது ஒரு கிராம் வெள்ளியின் விலை. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 65ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான். இந்தியாவும், பிரான்ஸும் ஜனநாயக கருத்துகளுக்கு மதிப்பளிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம். பயங்கரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் இணைந்து செயல்படும் எனவும் பேச்சு. அதேசமயம், தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு பிரான்ஸ் முழு ஆதரவு அளிக்கும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உறுதி.
டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் நிர்வாக குறைபாட்டால் பங்கேற்பாளர்கள் அதிருப்தி. இந்தியாவின் உலகளாவிய பிம்பம் கெட்டுப் போனால் கவலை இல்லை என்ற ரீதியில் பிரதமர் செயல்படுவதாக மல்லிகார்ஜூன் கார்கே குற்றச்சாட்டு.
ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம். ஏப்ரல் 1க்குள் பிரமாண பத்திரம் சமர்ப்பிக்க உத்தரவு.
வங்கதேசத்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் தாரிக் ரகுமான். பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார்.
துபாயில் காவலர்கள் பணியை செய்யும் தானியங்கி ரோந்து ரோபோக்கள். தீயணைப்புத் துறையிலும் நவீன ரோபோக்களை அறிமுகம் செய்து அசத்தல்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாகத் திரண்ட கிரிக்கெட் உலகம். சிறையில் இருப்பவரை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் என பாகிஸ்தான் பிரதமருக்கு சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா. இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்.
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன்... யூடியூப்பில் 66 லட்சம் பார்வையாளர்களை கடந்த டைட்டில் டீசர் வீடியோ.

