Headlines | பாஜக மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு முதல் ஐரோப்பிய நாடுகளை மிரட்டும் காலநிலை வரை!
புறவாசல் வழியாக தமிழ்நாட்டில் நுழைய பாஜக முயற்சிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியின் அடுத்தகட்ட பரப்புரை சுற்றுப்பயணம் அறிவிப்பு... பிப்ரவரி 21 முதல் 26 வரை திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள திட்டம்.
மோடி - ரங்கசாமி அரசுக்கு ஆதரவைத் தொடர வேண்டும் என மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்.
காரைக்காலில் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடர்வதாக பேட்டி.
தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸின் நிலை என்ன? பிப்ரவரி 17ஆம் தேதி புதுச்சேரி வரும் கே. சி.வேணுகோபால், சோடங்கரிடம் அறிக்கை கேட்கும் ராகுல்...
அதிகாரப் பகிர்வு அவசியம், ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்... மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டம்... காங்கிரஸில் இருந்து கார்கே, ராகுல், செல்வப்பெருந்தகை பேசினால் மட்டுமே பதிலளிப்போம் என்றும் பேட்டி...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 5000 ரூபாய் வழங்கியதில் முறைகேடு என வழக்கறிஞர் ஜி.எஸ். மணி புகார்... சிபிஐ விசாரணை, ஆடிட்டர் ஜெனரல் தணிக்கை கோரி மனு...
தங்கக் கட்டியாக கொடுத்தாலும் மீண்டும் திமுகவை மக்கள் ஆட்சியில் அமர விடமாட்டர்கள்... மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்...
மகளிருக்கு ஐயாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கியது தேர்தலுக்காக அல்ல என துணை முதல்வர் உதயநிதி கருத்து... அதிமுகவும், பாஜகவும் உரிமைத்தொகையை நிறுத்த முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு...
ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்திரை கிழியும் என டிடிவி தினகரன் காட்டம்... தனக்கான பலனை எதிர்பார்க்காமல் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கவும் வலியுறுத்தல்...
அடுத்தவர் ஆரம்பித்த கட்சியில் இருப்பவர்கள் தனியாக கட்சி தொடங்கி நிற்க முடியுமா என கேள்வி எழுப்பிய விஜய்... அண்ணாவே விஜய்யை பார்த்துதான் கட்சி ஆரம்பித்தார் என உதயநிதி ஸ்டாலின் கிண்டல்...
ரொம்ப விசில் அடிக்காதீங்க என தொண்டர்களிடம் கேட்டுக்கொண்ட அன்புமணி... சென்னை சோழிங்கநல்லூரில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவுறுத்தல்...
சமூகநீதி பற்றிய தெளிவில்லாத ஆட்சியாளர்கள், போதைக்கும் இலவசத்துக்கும் மக்களை அடிமைப்படுத்திவிட்டார்கள்... போராடாமல் எதுவும் கிடைக்காதென பாமக தொண்டர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்...
நடிகை குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்... திமுக பெண் எம்.பி.க்கள், இடதுசாரி, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினை...
திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை... ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக நிர்வாகி குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு...
சேலத்தில் நடந்த விஜய் கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த நபரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு... உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தவெக சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு...
என்னதான் ஆங்கிலம் படித்தாலும், தமிழில்தான் உணர்வோடு உரையாட முடியும்... பெண்கள் கல்லூரி விழாவில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு...
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு... சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு சீரான ரயில் சேவை...
தெற்கு வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
பிப்ரவரி 21ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காவிரி படுகை, தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
தனியார் கூட்டுடன் நகரப்பகுதிகளை வளர்த்தெடுக்க ஒரு லட்சம் கோடி ரூபாயில் புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றுக்கடியில் ரயில் மற்றும் பிற வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கும் பச்சைக்கொடி...
காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பிரதமர் மோடி விமர்சனம்... பாஜக ஆட்சியில் அஷ்டலட்சுமியாக வடகிழக்கு பகுதியை பார்ப்பதாகவும் பேச்சு...
அமெரிக்க பருத்தி இறக்குமதியால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என ராகுல்காந்தி விமர்சனம்... ராகுலுக்கு பொருளாதாரத்தை பற்றி புரிதல் இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாடல்...
அசாமில் விமானம் தரையிறங்கும் வகையிலான புதிய நெடுஞ்சாலை திறப்பு... பிரதமர் மோடி சென்ற விமானப்படை விமானம் நெடுஞ்சாலையில் தரையிறங்கியது...
ஐரோப்பிய நாடுகளை மிரட்டும் காலநிலை... ரஷ்யாவில் உறைபனி... ஸ்பெயின், பிரான்சில் கனமழையும் வதைக்கும் சூழல்...
டி20 உலகக்கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி... கொழும்புவில் இன்று நடக்கும் போட்டியை காண ரசிகர்கள் ஆவல்...
சுவீடனில் நடந்த கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் முதலிடம் பிடித்து அசத்தல்... பனிப் படர்ந்த சாலையில் சீறிப்பாய்ந்த கார்களை கண்டுரசித்த சுற்றுலா பயணிகள்...

