திருப்பூர் - 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்...? தொழிலாளர்களை அழைக்கும் பின்னலாடை நிறுவனங்கள்!

பின்னலாடை துறையில் பணிபுரிபவர்களா நீங்கள்? எனில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான் இது.. இந்தியாவின் டாலர் நகரம் உங்களை அழைக்கிறது.. தொடர்ந்து பாருங்கள் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
திருப்பூர்
திருப்பூர்முகநூல்

செய்தியாளர்: சுரேஷ்குமார்

இந்தியாவின் டாலர் சிட்டியாக விளங்கிவரும் திருப்பூர், ஏற்றுமதி மூலம் 34,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது. உள்நாட்டு பனியன் தேவையில் 30,000 கோடி ரூபாய் வர்த்தகமும் இங்கிருந்து நடைபெறுகிறது. திருப்பூர் பின்னலாடை துறையில் 10 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் ஏற்றுமதி 10 சதவிகிதம் குறைந்தாலும் பின்னலாடை 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் ஏற்றுமதியாளர்கள். மேலும், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வர்த்தகம் 8 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதற்கு கொரோனாவுக்கு பிறகான நாட்களில் சர்வதேச அளவில் காணப்பட்ட பொருளாதார மந்தநிலை, அதைத்தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவையே காரணமாக கூறப்பட்டது.

திருப்பூர்
தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி

இந்தச்சூழலில், தற்போது இந்நியாவின் போட்டி நாடுகளில் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் அங்கு செல்லக்கூடிய ஆர்டர்கள் அனைத்தும் இந்தியாவிடம் திரும்பியுள்ளது. இதனால், திருப்பூரில் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக கூறுகிறார் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம்.

இருப்பினும் டாலர் சிட்டி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டுமென்றால் மத்திய அரசு வங்கதேச ஆடைகளுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்கின்றனர் பின்னலாடை உற்பத்தியாளர்கள். இதன்மூலம் சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படுவதோடு, உள்நாட்டில் ஆடை தயாரிப்பு பாதிக்கப்படாமல் காக்கப்படும் என ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com