கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா - 2 ஆயி‌‌ரம் பயணம்

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா - 2 ஆயி‌‌ரம் பயணம்
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா - 2 ஆயி‌‌ரம் பயணம்

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவிற்கா‌க தமிழகத்தில் இருந்து 2 ஆயி‌‌ரத்திற்கும் மேற்பட்டோர் புறப்பட்டுள்ளனர்‌.

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இன்று காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகுகள் புறப்பட்டன. மாலை 6 மணிக்கு கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடக்கிறது.

இதைத் தொடர்ந்து திருப்பலி, தேர்ப்பவனி நடைபெறும். நாளை காலை வழிபாடு, திருவிழா திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது. இரண்டு நாள் விழாவில் இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்து 903 பேர் சென்றுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு பின் பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் ராமநாதபுரம் மாவட்ட டிஐஜி ரூபா மீனா உத்தரவின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்தியக் கடலோரக்காவல் படை, இலங்கை கடற்படையினர் இணைந்து செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com