தமிழ்நாடு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஒரே பெயருள்ள வேட்பாளர்கள் சிலர் போட்டியிடுகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தினகரன் என்ற பெயரில் மூன்று பேரும், மதுசூதனன் என்ற பெயரில் இருவரும் போட்டியிடுகின்றனர்.
அதிமுக அம்மா அணி சார்பாக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதே பெயரில் வியாசர்பாடியைச் சேர்ந்த கே.தினகரன் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மணலியைச் சேர்ந்த ஜி.தினகரன் மற்றொரு சுயேட்சை வேட்பாளராக களத்தில் உள்ளார்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பாக இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எஸ்.மதுசூதனன் என்ற வேட்பாளளும் சுயேட்சையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

