வடகிழக்கு பருவமழை: மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்களை அனுப்பவேண்டும் - ஓபிஎஸ்

வடகிழக்கு பருவமழை: மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்களை அனுப்பவேண்டும் - ஓபிஎஸ்

வடகிழக்கு பருவமழை: மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்களை அனுப்பவேண்டும் - ஓபிஎஸ்
Published on

”வடக்கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டால் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் அமைச்சர்களையும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூலம்தான் மழை நீர் கிடைக்கிறது. இந்த வருடம் அக்டோபர் 26-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள நிலையில், ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டால், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் செல்வதோடு பெரும் சேதத்தையும்‌ விளைவிக்கும்‌ அபாயம் உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களுக்கும்‌ அமைச்சர்‌களையும்‌, ஐஏஎஸ் அதிகாரிகளையும்‌ அனுப்பி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com