பருவமழை தீவிரம்: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

பருவமழை தீவிரம்: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

பருவமழை தீவிரம்: அணைகளின் நீர்மட்டம் உயர்வு
Published on

தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு, மேட்டூர் அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122 அடியாக உள்ளது. அணையின் நீர்இருப்பு 3024 மில்லியன் கனஅடியாக‌ உள்ளது. அணையின் ‌நீர்வரத்து வினாடிக்கு 3435 கன அடியாக உள்ள நிலையில், குடிநீர் மற்றும் பாசனத்திற்கான நீர்திறப்பு 1000 கன அடியாக உள்ளது. 
மேட்டூர் அணையின் நீர்வரத்து 4141 கன அடியில் இருந்து 4174 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர்மட்டம் 84.98 அடியாக உள்ளது. அணையின் நீர் இ‌ருப்பு 47.99 டி.எம்.சி மற்றும் நீர் திறப்பு 4000 கன அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com