வீதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் குரங்குகள்.. மக்கள் அச்சம்

மதுரை மாவட்டம் மேலூர் நகரில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலூர் நகரில் குரங்குகளின் நடமாட்டம் முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து காணப்படுகிறது. சிவன்கோவில் தெரு, நகைக்கடை பஜார், காந்திஜி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் குரங்குகள் உலா வருவதுடன், கடைகளில் உள்ள பொருட்களை பறித்துச் செல்லும் சூழல் உள்ளது. கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும் குரங்குகள் மின்சார வயர்கள் மற்றும் கேபிள் வயர்களை அறுத்து விடும் நிலையும் உள்ளது.

monkey
monkeypt desk

உணவு பொருட்களை தேடி வீடுகளுக்குள் நுழையும் குரங்குகள், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதனால் மேலூர் நகரில் சுற்றித்திரியும் குரங்குகளை கட்டுப்படுத்துவதுடன், கூட்டம் கூட்டமாக அலையும் குரங்குகளை பிடிக்க மாவட்ட வனத்துறை போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com