குரங்குகளுக்கு தின்பண்டங்கள் அளிப்பதால் நேரும் விபரீதம்

குரங்குகளுக்கு தின்பண்டங்கள் அளிப்பதால் நேரும் விபரீதம்
குரங்குகளுக்கு தின்பண்டங்கள் அளிப்பதால் நேரும் விபரீதம்
Published on

சத்தியமங்கலத்தில் சுற்றுலாவிற்கு வருபவர்கள் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், திம்பம், பண்ணாரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குரங்குகள் உள்ளன. ஆசனூர் வனத்தின் வழியாக, மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் நாள்தோறும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அண்மைகாலமாக திம்பம் வழியாக செல்லும் பயணிகள் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் அளித்து பழகப்படுத்திவிட்டால், அவை சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்து காத்திருகின்றன. அவர்கள் அளிக்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுகின்றன. இதனால் அவை காட்டுக்குள் செல்லமால் திம்பம் மலைப்பாதையில் நடமாடுகின்றன. 

கடம்பூர் மலைப்பாதையில் மல்லியம்மன் கோவில் அருகிலும் குரங்குகள் அதிகளவில் உள்ளன. கோவிலின் மலை உச்சியில் இருந்து நீர்வீழ்ச்சி போல் அருவி கொட்டுவதால், தண்ணீர் குடிக்க வரும் குரங்குகளுக்கு அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இயற்கைக்கு மாறாக தயாரிக்கப்பட்ட துரிதவகை உணவுப் பொருள்களை வழங்குகின்றனர். இதனை சாப்பிடும் குரங்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு, அதன் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன் சாலையில் செல்வோரை எதிர்பார்த்து காத்திருக்கும்போது வாகனத்தில் அடிபட்டி உயிரிழக்கின்றன. 

கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்குகளுக்கு பழங்களை வழங்குகின்றனர். குரங்குகளுக்கு தின்பண்டங்கள் அளிக்கக்கூடாது என்ற எச்சரிக்கை பலகையை மீறி பக்தர்கள் அளிக்கின்றனர். இதனால் குரங்குகளுக்கு துரித உணவுகள் மற்றும் பழங்கள் கொடுப்பவர்கள் மீது வனத்துறை சார்பில் அபராதம் விதித்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com