தமிழ்நாடு
நான் எப்படியிருக்கேன்? கண்ணாடிப் பார்த்து விதவிதமாக ரசித்த குரங்கு!
நான் எப்படியிருக்கேன்? கண்ணாடிப் பார்த்து விதவிதமாக ரசித்த குரங்கு!
தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் மனிதர்களைப் போலவே விலங்குகளும் ஆர்வம் காட்டுகின்றன என்பது நம்ப முடியாத செய்திதான். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கடைத்தெருவில் ஆலமரம் ஒன்று உள்ளது. இதில் இருந்த குரங்கு ஒன்று உடைந்து போன முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளில் வைத்துக்கொண்டு பல கோணங்களில் தன் முகத்தை பார்த்து ரசித்தது ஆச்சரியப்படுத்தியது. சுற்றி நடைபெறும் எவற்றையும் பொருட்படுத்தாமல் மரத்தை சுரண்டுவதிலும் தன் முகத்தை கண்ணாடியில் திருப்பித் திருப்பி பார்த்து ரசிப்பதிலுமே கவனமாக இருந்த குரங்கை அப்பகுதியில் சென்ற மக்கள் வியப்புடன் பார்த்துச்சென்றனர்.