\
சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்காக  வழங்கிய 7 வயது சிறுமி..!

சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கிய 7 வயது சிறுமி..!

சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கிய 7 வயது சிறுமி..!
Published on

காவலர்களின் நிவாரண நிதிக்காக தான் சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை திருவள்ளூர் எஸ்பியிடம் 7 வயது சிறுமி ஒருவர் வழங்கினார். 

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தைப் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரான ரகுநாதன் என்பவரின் 7 வயது மகள் பூஜிதா. இவர் தான் சைக்கிள் வாங்குவதற்காக உணடியலில்  சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்துள்ளார். 

இந்நிலையில் அதனை காவலர்களின் நிவாரண நிதிக்காக,  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் தனது பெற்றோருடன் நேரில் சென்று வழங்கினார். அதில் 1,121 ரூபாயும் 75 பைசாவும் இருந்தது. அவற்றை பெற்றுக்கொண்ட எஸ் பி அரவிந்தன், அதனை காவலர்களின் நிவாரண நிதிக்காக பயன்படுத்தி கொள்வதாக கூறி சிறுமி பூஜிதாவை வெகுவாக பாராட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com