தமிழ்நாடு
குழந்தைகளுக்கு சூடுவைத்து கொடுமைப்படுத்திய தாய்
குழந்தைகளுக்கு சூடுவைத்து கொடுமைப்படுத்திய தாய்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ராஜாகுப்பம் பகுதியில் பெற்ற தாயே தனது குழந்தைகளுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவிதா என்ற அந்தப் பெண் தன் மகன் மற்றும் மகளை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்பட்கிறது. நேற்று தனது இரண்டு குழந்தைகளுக்கு உடல் முழுவதும் கண்டபடி சூடு வைத்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை மீட்டதுடன் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். காவல்துறையினர் இரண்டு குழந்தைகளையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகளின் தாய் கவிதா மற்றும் அவரட்து இரண்டாவது கணவர் கோபி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இரண்டு குழந்தைகளும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்