\
ஜமாத் பதவியிலிருந்து அதிமுக எம்.பி முகமதுஜான் நீக்கம்

ஜமாத் பதவியிலிருந்து அதிமுக எம்.பி முகமதுஜான் நீக்கம்

ஜமாத் பதவியிலிருந்து அதிமுக எம்.பி முகமதுஜான் நீக்கம்
Published on

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.பி முகமது ஜான், ஜமாத் காப்பாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக முகமது ஜான் உள்ளிட்ட 11 எம்.பிக்கள் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து டெல்லி, அசாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. அப்போது மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.பி முகமது ஜான், ஜமாத் காப்பாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com