மொஹரம் ஊர்வலம் - இஸ்லாமியர்களுடன் கைகோர்த்த இந்துக்கள்

மொஹரம் ஊர்வலம் - இஸ்லாமியர்களுடன் கைகோர்த்த இந்துக்கள்

மொஹரம் ஊர்வலம் - இஸ்லாமியர்களுடன் கைகோர்த்த இந்துக்கள்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் பங்கேற்ற மொஹரம் ஊர்வலம் நடைபெற்றது.

காவேரிப்பட்டிணத்தில்‌ இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து ஆண்டுதோறும் மொஹரம் ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான இந்துக்கள்‌ மற்றும் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்த விழாவிற்காக இமான் உசேன், அசேன் உசேன் ஆகி‌ய தியாகிகளின் நினைவிடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அதன் பின் நினைவு இல்லத்தின் முன்பாக அமைக்கப்படிருந்த தீ குண்டத்தில் ஆண்களும், பெண்களும் உடல் நலம் பெற வேண்டியும் சிறப்பு தொழுகை செய்து வழிப்பட்டனர். பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மதநல்லிணக்கத்தின் அடையாளமாக மொஹரம் பண்டிகையை இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com