அனல் பறந்த ரேக்ளா ரேஸ் களம்: புழுதி பறக்க தாவி ஓடி பரிசை தட்டித் தூக்கிய குதிரைகள்!

அனல் பறந்த ரேக்ளா ரேஸ் களம்: புழுதி பறக்க தாவி ஓடி பரிசை தட்டித் தூக்கிய குதிரைகள்!
அனல் பறந்த ரேக்ளா ரேஸ் களம்: புழுதி பறக்க தாவி ஓடி பரிசை தட்டித் தூக்கிய குதிரைகள்!

மோகனூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மாபெரும் குதிரை எல்கை பந்தயம் போட்டி நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பொங்கல் விழாவை ஒட்டி குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளில் குதிரை எல்கை பந்தயம் நடைபெற்றது. மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பந்தயத்தில் பெரிய குதிரைக்கு 12 கிலோ மீட்டர் தூரமும், சிறிய, புதிய குதிரைகளுக்கு 10 கி.மீ தூரமும் போட்டி நடைபெற்றது.

இதில், பெரிய குதிரைகளுக்கு முதல் பரிசாக 25 ஆயிரமும், 2 ஆம் பரிசாக ரூ.20 ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ.15 ஆயிரமும், இதே போல் புதிய, சிறிய குதிரை பிரிவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2 ஆம் பரிசு 7,500 ரூபாயும், 3 ஆம் பரிசாக 5 ஆயிரமும் என ரொக்கப் பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது.

பெரிய குதிரைக்கான போட்டியில் கோவை கோகுல் முதல் பரிசையும், சேலம் சந்திரன் 2 ஆம் பரிசையும், ஈரோடு சதீஸ் 3 ஆம் பரிசையும், புதிய குதிரைக்கான போட்டியில் சேலம் பண்ணாரி அம்மன் முதல் பரிசையும், சேலம் பெரியாண்டிச்சி 2 ஆம் பரிசையும், சேலம் கொல்லப்பட்டி 3 ஆம் பரிசையும், சிறிய குதிரைகளுக்கான போட்டியில் 30-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றதால் 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஈரோடு பால்காரர், கோவை வரதராஜ பெருமாள் முதல் பரிசையும் மோகனூர் பிரகாஷ், கோவை மரப்பாலம் 2 ஆம் பரிசுகளையும், கோவை பில்லா, பழனி எஸ்.எம்.ஆர். குதிரை 3 ஆம் பரிசையும் வென்றது.

வெற்றி பெற்ற குதிரை வீரர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகளை மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஷ்குமார் வழங்கி பாராட்டினார். இப்போட்டிகளை காண சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று பந்தய வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டியை கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com