\
வெற்றி வேல்... வீரவேல் எனப்பேசி கோவையில் பரப்புரையைத் தொடங்கிய மோடி..!

வெற்றி வேல்... வீரவேல் எனப்பேசி கோவையில் பரப்புரையைத் தொடங்கிய மோடி..!

வெற்றி வேல்... வீரவேல் எனப்பேசி கோவையில் பரப்புரையைத் தொடங்கிய மோடி..!
Published on

வெற்றிவேல், வீரவேல் எனக்கூறி கோவையில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

கோவை கொடிசியா மைதானத்தில் பாஜகவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு வெற்றிவேல், வீரவேல் எனக்கூறி தமிழகத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி பரப்புரையை தொடங்கினார். மேலும், வணக்கம் கோவை, வணக்கம் தமிழ்நாடு எனவும் பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய மோடி, “சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோவையில் மட்டும் 25 ஆயிரம் சிறு குறு நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டத்தால் பயன்பெற்றுள்ளன. புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜவுளித்துறையில் உள் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 7 ஜவுளி பூங்காக்கள் வரும் என உறுதி அளிக்கிறேன். வளர்ச்சியை மையப்படுத்தும் அரசு மட்டுமே வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகின்றனர். 11 கோடி விவசாயிகள் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். கொப்பறை தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலை 2 முறை உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com