“தமிழ் மொழியை போற்றுவோம்” - பிரதமர் மோடி

“தமிழ் மொழியை போற்றுவோம்” - பிரதமர் மோடி

“தமிழ் மொழியை போற்றுவோம்” - பிரதமர் மோடி
Published on

உலகின் மிகப்பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பிரதமருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் மோடிக்கு பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உட்பட பலர் வரவேற்றனர். அப்போது விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். 

பின்னர் சென்னை ஐஐடி சென்ற பிரதமர் மோடி, இந்திய- சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் ஐஐடி மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார். 

இதையடுத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “உங்கள் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு உள்ளது. இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர். உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். தமிழை போற்றுவோம்.” எனப் பேசினார். 

இதைக்கேட்ட மாணவர்கள் கரவொலி எழுப்பி உற்சாகத்தில் திளைத்தனர். தொடர்ந்து பேசிய மோடி, “இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கையை கண்டு உலகம் வியக்கிறது. சிறந்த மாணவராக மட்டுமன்றி சிறந்த குடிமகனாகவும் விளங்க வேண்டும். அமெரிக்க பயணத்தின்போது பல்வேறூ தரப்பினருடன் உரையாடினேன். எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்கள் கண்களில் பார்க்கிறேன். நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி உள்ளது. இந்தியாவின் இளைய தலைமுறையினரின் நம்பிக்கையைக் கண்டு உலகத் தலைவர்கள் பிரமிக்கின்றனர். இளைஞர்களின் திறமைக்கு பின்னணியில் சென்னை ஐஐடி உள்ளது” எனத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com