மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றார்.
மாமல்லபுரத்தில் அர்ஜூனன் தபசு பகுதியில் மோடியை சந்தித்த சீன அதிபர் கைகுலுக்கினார். 63 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றுள்ளது. சீன அதிபரை வரவேற்ற மோடி நீண்ட நேரம் அவரிடம் உரையாடினார்.
இதையடுத்து மாமல்லபுர சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு மோடி விளக்கம் அளித்து வருகிறார்.