தமிழகம் வந்தால் தோசை கொடுப்பீர்களா மோடி ஜாலி பேச்சு
ஏழைப் பெண்களுக்கான இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தில் கீழ் பயன் பெற்ற தமிழக பெண்ணிடம் உங்கள் ஊருக்கு வந்தால் எனக்கு தோசை செய்து கொடுப்பீர்களா என பிரதமர் மோடி கேட்டுள்ளார்.
மத்திய அரசு ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழக்கும் உஜ்வலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் இன்று கலந்துரையாடினார். தமிழகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ருத்ரம்மா என்ற பெண்ணிடம் மோடி நிகழ்த்திய கலந்துரையாடல் சுவாரஸ்யமாக அமைந்தது. வணக்கம் என கூறி மோடி கலந்துரையாடலை தொடங்கினார். பின்னர் ருத்ரம்மா தமிழில் பேசியது மோடிக்கும், அவர் ஹிந்தியில் பேசியது ருத்ரம்மாவுக்கு தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டது. அப்போது உங்கள் ஊருக்கு வந்தால் எனக்கு தோசை செய்து கொடுப்பீர்களா என பிரதமர் மோடி கேட்டார். அதற்கு அந்தப்பெண்ணும் கண்டிப்பா தோசை செய்து கொடுக்கிறேன் என்றார்.