"நாடாளுமன்றத்தில் மோடி இப்படி பேசியிருக்கக் கூடாது" - ஆ.ராசா எம்.பி. காட்டம்

"நாடாளுமன்றத்தில் மோடி இப்படி பேசியிருக்கக் கூடாது" - ஆ.ராசா எம்.பி. காட்டம்

"நாடாளுமன்றத்தில் மோடி இப்படி பேசியிருக்கக் கூடாது" - ஆ.ராசா எம்.பி. காட்டம்
Published on

குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி, இரண்டாம் தர அரசியல் கட்சித் தலைவர்போல் பேசி நாடாளுமன்றத்தின் புனிதத்தையும் மாண்பையும் சிறுமை படுத்திவிட்டார் என ஆ.ராசா குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா எம்.பி பல்வேறு இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும் போது...

பாராளுமன்றத்தில் மிருக பலத்தோடு இருக்கும் பிரதமர் மோடி குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய ஒருமணி நேரத்தில் 50 நிமிடம் முன்னாள் பிரதமர் நேரு செய்தது தவறு காங்கிரஸ் செய்தது தவறு அவர்கள் ஆட்சியால் தான் இந்தியா வீணாக போய் விட்டது என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசவேண்டிய அரசியல் விவகாரங்களை பாராளுமன்றத்தில் பேசி பாராளுமன்றத்தின் மாண்பையும் புனிதத்தையும் மேன்மையையும் சிறுமைபடுத்தி உள்ளார் என குற்றம்சாட்டினார்.

மேலும் அண்டை நாடுகளை பார்த்தும் இந்தியாவில் உள்ள பிறமாநில முதல்வர்களையும் மாநிலங்களையும் பார்த்தும் பயப்படாத மோடி. தமிழக எம்பி-களையும், தமிழக முதல்வரை பார்த்தும் பயப்படுகிறார். ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜானாவை காலி செய்த கயவாளி ,ஊழல் செய்தவர், ஊதாரித்தனமான செலவுகளை செய்தவர்.

தமிழகத்தை 6 லட்சம் கோடி கடனில் விட்டு சென்றவர். ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களில் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார் மீதமுள்ள நான்கரை ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றும். என பேசி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com