\
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புweb

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை.. கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தென் தமிழக கடலோரப் பகுதிகளீல் சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மிதமான மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 16ஆம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைபெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசிலபகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

கனமழை
கனமழைமுகநூல்

இன்று முதல் 3 நாட்களுக்கு தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர்வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com