அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புpt web

Rain Update | அடுத்த 3 மணி நேரம் குளிர்விக்கப்போகும் மேகம்; 9 மாவட்டங்களுக்கு குட் நியூஸ்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மழை
சென்னை மழைpt web

இதற்கு முன்பே, தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு மாநகரின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. சிவன் கோவில் பகுதி, அந்தோணியார் கோவில் காய்கறி சந்தை பகுதி, பழைய பேருந்து நிலையம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் சிரமமடைந்தனர்.

ஏற்கனவே, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரும் 20ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com