பிரபல துணிக்கடையின் பெண்கள் ட்ரையல் ரூமில் ஏசி பாய்ண்ட்டில் இருந்த செல்ஃபோன்; அதிர்ச்சி சம்பவம்

திருக்கோவிலூரில் பிரபல துணிக்கடை ஒன்றில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ஏசி பாயிண்ட்டில் செல்ஃபோன் இருந்ததைக் கண்டு அலறியடித்து அறையை விட்டு வெளியே பெண்கள் ஓடிவந்த நிலையில், அதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்கோவிலூர் துணிக்கடை
திருக்கோவிலூர் துணிக்கடை PT Desk

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் கடந்த ஓராண்டுகளாக இயங்கி வருகிறது பிரபல நிறுவனத்தின் துணிக்கடை. இந்தக் கடைக்கு நேற்றிரவு இரண்டு பெண்கள் ஆடை வாங்குவதற்காக வந்துள்ளனர். அப்போது இரண்டு பெண்களும் தாங்கள் வாங்கிய ஆடை சரியான அளவில் உள்ளதா என ட்ரையல் ரூம் எனப்படும் உடை மாற்றும் அறையில் சென்று அணிந்து பார்க்க முற்பட்டுள்ளனர். அப்போது அந்த அறையில் உள்ள மேல் பகுதியில் ஏசி பாயிண்ட்டில் செல்ஃபோன் ஒன்று இருந்ததை கண்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

திருக்கோவிலூர் துணிக்கடை
திருக்கோவிலூர் துணிக்கடை PT Desk

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் கூச்சலிட்டதை கண்ட அருகாமையில் இருந்தப் பெண் ஒருவர், உடனடியாக உள்ளே சென்று ஏசி பாயிண்டில் வைக்கப்பட்டிருந்த செல்ஃபோனை வெளியே எடுத்து வந்துள்ளார். பின்னர் துணிக்கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த செல்ஃபோனை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு, பிரபல துணிக்கடையில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் செல்ஃபோனை எடுத்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த செல்ஃபோனில் தற்போது மெமரி கார்டு இல்லை என்பதால், மெமரி கார்டை பெண் எடுத்து விட்டாரா? என திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருக்கோவிலூர் துணிக்கடை
திருக்கோவிலூர் துணிக்கடை PT Desk

தற்போது கிடைத்த செல்ஃபோனை வைத்து உண்மையில் செல்ஃபோன் வெளிநபரால் கொண்டு வந்து கடையில் வைக்கப்பட்டதா அல்லது ஊழியர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டு உள்ளார்களா என திருக்கோவிலூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com