“குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களியுங்கள்” - மனிதநேய மக்கள் கட்சி

“குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களியுங்கள்” - மனிதநேய மக்கள் கட்சி
“குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களியுங்கள்” - மனிதநேய மக்கள் கட்சி

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கக வேண்டும் என தமிழக கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், “நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிமல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கின்றது. இது மதரீதியான பாரபட்சம் ஆகும். 

நமது அண்டை நாடுகளாக உள்ள மியான்மார் மற்றும் இலங்கையைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய மூன்று நாடுகளை மட்டும் இந்த மசோதா கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பது பாரபட்சமாகும். இலங்கையில் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் பெற்று வாழ்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பதை நிராகரித்து இருப்பதைத் தமிழக அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, மக்களிடையே பாரபட்சத்தைப் பாராட்டுகின்ற, இலங்கைத் தமிழர் நலனுக்கு விரோதமான இச்சட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com