பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மநீம கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மநீம கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மநீம கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

2016-ம் ஆண்டு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 62 ரூபாய்க்கும், 2017-ல் 74.28 ரூபாய்க்கும், 2018-ல் 76.29 ரூபாய்க்கும், 2019-ல் 75.67 ரூபாய்க்கும், 2020-ல் 72.28 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஆனால், 2021-ல் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. சென்னையில் 2021-ல் ஜனவரி மாதம் 86.51 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 லிட்டர் பெட்ரோல் விலை, 6 மாதத்துக்குள், அதாவது ஜூலை மாதத்தில் 101.67 ரூபாயை எட்டியுள்ளது. அதேபோல் கேஸ் சிலிண்டர் விலையும் நாளுக்குநாள் ஏறிக்கொண்டே வருகிறது.

பெட்ரோல், டீசல் மற்றும் விலை உயர்வுக்கு நாடு முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை, கன்னியாகுமரி, பொள்ளாச்சி, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எரிபொருள் விலை உயர்வு ஏணிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com