மேகதாது அணை விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்கவேண்டும் - கமல்ஹாசன்

மேகதாது அணை விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்கவேண்டும் - கமல்ஹாசன்
மேகதாது அணை விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்கவேண்டும் - கமல்ஹாசன்

காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியிருக்கிறார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு முடிவுடன் இருக்கிறது. அதேசமயம் அதை தடுத்தே தீருவோம் என தமிழக அரசும் தீர்மானமாக இருக்கிறது. காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்ட தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது எதிர்ப்பை காட்டி இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நடந்தாய் வாழி காவிரி என்று பாடும் நம்மை நின்றாய் நீ காவிரி என்று வாடும் நிலைக்கு தள்ளுகிறது கர்நாடகா. தடையேதுமின்றி ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நதியில் ஏற்கெனவே கர்நாடகா பல அணைகளைக் கட்டிவிட்டது. மேலும் ஒரு அணையை கட்டி தமிழக விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. இரு மாநிலங்களின் நதிநீர் பங்கீட்டு பிரச்னையை தீர்க்கவேண்டிய மத்திய அரசு அதை உணரவில்லை. அரசியல் காரணங்களுக்காக காவிரி பிரச்னையில் கர்நாடகா பக்கம் மத்திய அரசு சாய்ந்திருப்பது வழமை. மேகதாது விவகாரத்தில் இந்த அநீதிப் போக்கு இனியும் தொடர்வது நியாயமல்ல’’ என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com