மநீம பொதுச்செயளாளர் முருகானந்தம் கட்சியிலிருந்து விலகல்

மநீம பொதுச்செயளாளர் முருகானந்தம் கட்சியிலிருந்து விலகல்

மநீம பொதுச்செயளாளர் முருகானந்தம் கட்சியிலிருந்து விலகல்
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை தழுவியதை அடுத்து அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் பலர் கட்சியிலிருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ளார்.

இதுபற்றி அவர் திருச்சியில் அளித்த பேட்டியில், கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கினால் தேர்தலில் தோல்வியடைந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கூட்டணிக்கட்சிகளுக்கு 100 தொகுதிகளை ஒதுக்கியதே தோல்விக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட நமது கட்சியில் ஆள் இல்லை என கமல் கூறியது உறுத்தலாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com