ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி: கமல்ஹாசன்

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி: கமல்ஹாசன்
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி: கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்‌தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இந்த கூட்டத்தில் பல விசயங்கள் பேசப்பட்டது, அதில் கூட்டணி பற்றி பேசுவதற்கு அதிகாரத்தை எனக்கு வழங்கியிருக்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்காக வேட்பாளர் நியமிக்கும் பொறுப்பு  மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மக்கள் நலனுக்காக இருக்கும் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்தை மையப்படுத்தியே எங்களது பிரச்சாரம் இருக்கும் என்றும் தமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிப்பவர்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்காது என்றும் தெரிவித்தார். மேலும் ஜனவரி 31 ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் மொத்த உறுப்பினர்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் வந்தால் போட்டியிடுவோம் என்றும் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவை நாங்கள் இன்று எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் வரும் தலைமையை பொருத்து தலைமையை ஏற்பதா அல்லது நாங்களே தலைமை ஏற்பதா என்ற முடிவு எடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com