க.அன்பழகன் மறைவிற்கு டிடிவி தினகரன், கமல்ஹாசன் இரங்கல்

க.அன்பழகன் மறைவிற்கு டிடிவி தினகரன், கமல்ஹாசன் இரங்கல்

க.அன்பழகன் மறைவிற்கு டிடிவி தினகரன், கமல்ஹாசன் இரங்கல்
Published on

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் (98) காலமானார். இவரது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் கவிதை எழுதியுள்ளார். அத்துடன் திமுகவினர் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். திமுகவின் அனைத்து கொடிக்கம்பங்களிலும், அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அன்பழகன் மறைவு தொடர்பாக ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று வருந்தியுள்ளார்.

அத்துடன் இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யுமான பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் – தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் தலைமையினை ஏற்று, அரசியல் களத்திற்கு வந்தவருமான பேராசிரியர் க. அன்பழகனின் மறைவு செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். 1922-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி இன்றைய திருவாரூர் மாவட்டத்தில், காட்டூர் என்கிற கிராமத்தில் பிறந்த பேராசிரியர் அவர்கள், 97 வயது வரை நிறைவான வாழ்வினை புகழுடன் வாழ்ந்து மறைந்துள்ளார்” என கவலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com