“திமுக கூட்டணியில் தொடர்வது உறுதி” - ஜவாஹிருல்லா

அதிமுக பாஜக கூட்டணி குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கருத்து.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, எந்த அளவுக்கு அதில் உறுதியாக இருக்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான். நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வது உறுதி” என தெரிவித்துள்ளார்.

பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் அதிமுகவுடன் செல்லலாம் என தற்போது பேச்சு எழுந்துள்ளது. ஆனால் திமுக உடனான கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இதில் மிக சாமர்த்தியமாகவே பதிலளித்து வருகின்றன.

ஜவாஹிருல்லா
"அ.தி.மு.க - வி.சி.க கூட்டணியா”? திருமாவளவனை நலம் விசாரித்த எடப்பாடி... பின்னணி என்ன?

இந்நிலையில்தான் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மேற்கூறிய கருத்தை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com