ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை: எம்.எம்.சி முன்னாள் தலைவர் பதில்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜரான முன்னாள் எம்.எம்.சி தலைவர் முரளிதரன், ஜெயலலிதாவுக்கு தான் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையம் முன், சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முரளிதரன் இன்று ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, தான் கல்லூரி முதல்வராக இருந்ததால் அதன் அடிப்படையில் தன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டதாக கூறினார். ஜெயலலிதாவுக்கு தான் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், அவரை பார்க்கவே இல்லை என்றும் விசாரணை ஆணையத்தில் பதிலளித்ததாக தெரிவித்தார்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ ரீதியாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் விளக்கமளித்ததாக கூறினார். இதற்கிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு வந்த 300க்கும் மேற்பட்ட புகார்கள் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.