\
அமைச்சர்களின் வாகனங்களில் அழைத்துவரப்படும் எம்எல்ஏக்கள்

அமைச்சர்களின் வாகனங்களில் அழைத்துவரப்படும் எம்எல்ஏக்கள்

அமைச்சர்களின் வாகனங்களில் அழைத்துவரப்படும் எம்எல்ஏக்கள்
Published on

கூவத்தூரிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் வாகனங்களில் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்படும் எம்எல்ஏக்கள், கணக்கெடுக்கப்பட்டபின்னர் அமைச்சர்களின் வாகனங்களில் சென்னை புறப்பட்டனர். முன்னதாக, கூவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுகவிடம் போதிய பலம் இருப்பதாகத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com