முதலமைச்சர் பழனிசாமியுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு

முதலமைச்சர் பழனிசாமியுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு

முதலமைச்சர் பழனிசாமியுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு
Published on

முதலமைச்சருக்கு எதிராக கருத்துகளை கூறிவந்த எம்எல்ஏ கருணாஸ் இன்று திடீரென முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சமீப காலமாகவே முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக கருத்துகளை கூறிவந்தார். 

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை இன்று திடீரென எம்எல்ஏ கருணாஸ் சந்தித்து பேசினார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரிய மனுவை கருணாஸ் அண்மையில் திரும்பப் பெற்றிருந்த நிலையில் அவர் முதலமைச்சர் பழனிசாமியை இன்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது.

இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பேசிய எம்எல்ஏ கருணாஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கவில்லை எனத் தெரிவித்தார். திருவாடானை தொகுதியில் கண்மாய்களை தூர்வாருவது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியைச் சந்தித்து பேசியதாகவும் விளக்கம் அளித்தார். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையும் என்பதால் அதனை திரும்பப் பெற்றதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com