\
அணி மாறிவிடுவேன்: எம்எல்ஏ எச்சரிக்கை

அணி மாறிவிடுவேன்: எம்எல்ஏ எச்சரிக்கை

அணி மாறிவிடுவேன்: எம்எல்ஏ எச்சரிக்கை
Published on

கோவை மாவட்டம் பெரியகுயிலி பகுதியில் செயல்படும் கல்குவாரியை மூ‌ட நடவடிக்கை எடுக்காவிட்டால், தாம் அணி மாறப்போவதாக சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் எச்சரித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட சூலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ், பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் கல்குவாரி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, கல் குவாரியை மூட வேண்டும் எனவும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனகராஜ் வலியுறுத்தியுள்ளார். இல்லாவிட்டால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி, வேறு அணிக்கு மாறப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com