\
அதிமுக தொண்டர்களுக்கு மது, பிரியாணி வழங்கிய எம்எல்ஏ கனகராஜ்: வீடியோ வெளியானது

அதிமுக தொண்டர்களுக்கு மது, பிரியாணி வழங்கிய எம்எல்ஏ கனகராஜ்: வீடியோ வெளியானது

அதிமுக தொண்டர்களுக்கு மது, பிரியாணி வழங்கிய எம்எல்ஏ கனகராஜ்: வீடியோ வெளியானது
Published on

கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சி எம்.எல்.ஏ கனகராஜ்
தலைமையில் பணம், மது, பிரியாணி வழங்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் கோவை
சுல்தான்பேட்டையிலும் நடைபெற்றன. விழாவிற்காக தொண்டர்களை அழைத்துச் செல்லும் அரசு, தனியார் மற்றும் பள்ளி -
கல்லூரிகளின் பேருந்து ஓட்டுநர்கள், கிளீனர்கள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று காலையிலேயே சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் வீட்டில் முகாமிட்டனர்.

அதிமுகவினரை அழைத்துச் செல்லும் ஒவ்வொரு பேருந்துகளுக்கும் மது பாட்டில், பிரியாணி, தண்ணீர் பாக்கெட் மற்றும்
கட்சி கொடிகள் என, எம்.எல்.ஏ தலைமையில் தனித்தனியாக பிரித்து வழங்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. பேருந்து
ஓட்டுநர் மற்றும் கிளீனர்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வழங்கப்பட்டது அந்த காட்சியில் இருக்கிறது.

இதுகுறித்து எம்.எல்.ஏ.வின் உதவியாளர் கோபியிடம் கேட்டபோது, இது தவறான தகவல் என்று தெரிவித்தார். இந்த
வீடியோ காட்சிகளில் உள்ளது திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com