\
ஜக்கி ஆசிரமத்திற்கு தடை விதிக்க வேண்டும்: தனியரசு

ஜக்கி ஆசிரமத்திற்கு தடை விதிக்க வேண்டும்: தனியரசு

ஜக்கி ஆசிரமத்திற்கு தடை விதிக்க வேண்டும்: தனியரசு
Published on

’ஜக்கி வாசுதேவின் மூலை சலவைக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது’ என்று கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு கூறியுள்ளார்.

ஜோலார்பேட்டையில் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் ஜக்கி வாசுதேவ் ஆசிரமம் நடத்த அனுமதித்தது தவறு. அவரது ஆசிரம ஆதியோகி சிலை தமிழகத்துக்கு எதிரானது. அவரது நிறுவனங்களை இங்கு தடை செய்ய வேண்டும். ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் மூலை சலவைக்கு தமிழக மக்கள் இறையாகக் கூடாது. தமிழகத்தின் வளங்களை சுரண்டி மேலாதிக்க கருத்தை திணிப்பதற்க்கான சித்தாந்தத்தை கொண்டிருப்பவர் தான் அவர். அவரின் நிலைபாட்டுக்கு மக்கள் ஆதரவு தரக்கூடாது. நதிகளை இணைப்பது என்பது வெற்று முழக்கம். அது அரசியலுக்கானது’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com