\
புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு நேரில் சென்று உதவிய எம்எல்ஏ

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு நேரில் சென்று உதவிய எம்எல்ஏ

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு நேரில் சென்று உதவிய எம்எல்ஏ
Published on

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக கர்ப்பிணிக்கு எம்எல்ஏ நேரில் சென்று உதவி செய்தார்.

சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூரில் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்பதால் கர்ப்பிணி ஒருவர், பெண் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அந்தப்பெண்ணின் கணவர் ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் சிக்கிக்கொண்டதால் கர்ப்பிணி இங்கு தனியாக இருந்துள்ளார்.

வாடகை தரவில்லை என்பதற்காக கர்ப்பிணியை வீட்டைவிட்டு வெளியேற்றிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்த நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சி இது தொடர்பாக செய்தி வெளியிட்டது. செய்தியை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், உடனடியாக சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ வை அழைத்து உதவி செய்ய வலியுறுத்தினார்.

இதனையடுத்து அப்பெண்ணை நேரில் சந்தித்த எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், பெண்ணிற்கான மூன்று மாத வாடகை மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்களை வழங்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com